Gmail திட்டக் கொள்கைகள்

Gmailஐப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனருக்கும் மகிழ்ச்சியான அனுபவத்தைத் தொடர்ந்து வழங்குவதில் Gmail நிரல் கொள்கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தக் கொள்கைகள் மாறக்கூடும் என்பதால், அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளவும். மேலும் தகவலுக்கு Google இன் சேவை விதிமுறைகளைப் பார்க்கவும்.

ஸ்பேமும் திரள் அஞ்சலும்

ஸ்பேம் அல்லது சட்டத்திற்குப் புறம்பான வணிக மின்னஞ்சலை விநியோகிக்க Gmailஐப் பயன்படுத்தக்கூடாது.

CAN-SPAM சட்டம் அல்லது பிற ஸ்பேம் தடுப்புச் சட்டங்களை மீறி மின்னஞ்சலை அனுப்புவது; இலவச உரிமம் உள்ள, மூன்றாம் தரப்புச் சேவையகங்கள் வழியாக அங்கீகரிக்கப்படாத மின்னஞ்சலை அனுப்புவது; அல்லது பிறரின் மின்னஞ்சல் முகவரிகளை அவர்களின் ஒப்புதல் பெறாமல் விநியோகிப்பது ஆகிய செயல்களுக்கு Gmailஐப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை.

பயனர்களைத் திசைத்திருப்பும் அல்லது ஏமாற்றும் விதத்தில் மின்னஞ்சல்களைத் தானாக அனுப்பும்படி, நீக்கும்படி அல்லது வடிகட்டும்படி Gmail இடைமுகத்தை அமைக்கவும் அனுமதியில்லை.

”சட்டத்திற்குப் புறம்பான” அல்லது ”தேவையற்ற” அஞ்சல் தொடர்பான உங்கள் வரையறை, மின்னஞ்சலைப் பெறுபவர்களின் கண்ணோட்டத்திலிருந்து வேறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளவும். முன்பு உங்களிடமிருந்து மின்னஞ்சலைப் பெறுவதற்குப் பயனர்கள் தேர்வுசெய்திருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான பெறுநர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் போது, விதிமுறைகளைக் கருத்தில்கொள்ள வேண்டும். Gmail பயனர்கள் மின்னஞ்சல்களை ஸ்பேம் எனக் குறிக்கும் போது, எதிர்காலத்தில் நீங்கள் அனுப்பும் செய்திகளும் தவறான பயன்பாட்டைத் தடுக்கும் எங்கள் முறைமைகளால் ஸ்பேம் என வகைப்படுத்தப்படுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும்.

பல Gmail கணக்குகளை உருவாக்குதலும் பயன்படுத்துதலும்

Google கொள்கைகளைத் தவறாகப் பயன்படுத்த, Gmail கணக்கு வரம்புகளைப் பொருட்படுத்தாமலிருக்க, வடிப்பான்களை மீற அல்லது உங்கள் கணக்கில் உள்ள கட்டுப்பாடுகளை அழிக்க, பல கணக்குகளை உருவாக்கவோ பயன்படுத்தவோ கூடாது. (எடுத்துக்காட்டாக, மற்றொரு பயனர் உங்களைத் தடுத்திருந்தால் அல்லது தவறான பயன்பாடு காரணமாக உங்கள் Gmail கணக்கு முடக்கப்பட்டிருந்தால், மேற்கூறிய செயல்பாட்டைச் செய்வதற்காக மற்றொரு கணக்கை உருவாக்கக் கூடாது.)

தன்னியக்க முறையில் Gmail கணக்குகளை உருவாக்குவது அல்லது வாங்குவது, விற்பது, வணிகம் செய்வது அல்லது பிறருக்கு Gmail கணக்குகளை மறுவிற்பனை செய்வது ஆகியவற்றிற்கும் உங்களுக்கு அனுமதியில்லை.

தீப்பொருள்

வைரஸ்கள், தீப்பொருள், வார்ம்கள், குறைபாடுகள், ட்ரோஜன் ஹார்ஸ்கள், சிதைந்த கோப்புகள் அல்லது சிதைக்கும் அல்லது ஏமாற்றும் இயல்புள்ள பிற விஷயங்கள் போன்றவற்றைப் பரிமாற்ற, Gmailஐப் பயன்படுத்தக் கூடாது. கூடுதலாக, Google அல்லது மற்றவர்களின் நெட்வொர்க்குகள், சேவையகங்கள் அல்லது பிற உள்கட்டமைப்பின் செயல்பாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது குறுக்கீடு செய்யும் உள்ளடக்கத்தை வழங்கக் கூடாது.

மோசடி, ஃபிஷிங் மற்றும் பிற ஏமாற்ற நடவடிக்கைகள்

பிற பயனர்களின் வெளிப்படையான அனுமதி இல்லாமல் அவர்களின் Gmail கணக்கை உங்களால் அணுக முடியாமல் போகக்கூடும். தவறான பாசாங்குகளின் கீழ் தகவலைப் பகிர்வதில் பிற பயனர்களைச் சூழ்ச்சி செய்வது, திசைதிருப்புவது அல்லது ஏமாற்றுவது ஆகியவற்றிற்கு Gmailஐப் பயன்படுத்தக் கூடாது.

உள்நுழைவுத் தகவல், கடவுச்சொற்கள், நிதி விவரங்கள் அல்லது அரசாங்க அடையாள எண்கள் போன்ற பயனர்களின் தரவைப் பெறுவதற்காக ஃபிஷிங் செய்யக்கூடாது அல்லது பிறரை ஏமாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக Gmailஐப் பயன்படுத்தக்கூடாது.

குழந்தைப் பாதுகாப்பு

சிறார் பாலியல் கொடுமை சார்ந்தவற்றை Google ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. அது போன்ற உள்ளடக்கம் இருப்பதாக எங்களுக்குத் தெரியவந்தால், சட்டத்தின்படி, National Center for Missing and Exploited Children இடம் புகாரளிப்போம். இதுபோன்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட Gmail கணக்குகளை முடக்குவது உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்.

Google prohibits the grooming of children using Gmail, defined as a set of actions aimed at establishing a connection with a child to lower the child's inhibitions in preparation for sexual abuse, trafficking, or other exploitation.

If you believe a child is in danger of or has been subject to abuse, exploitation, or been trafficked, contact your local law enforcement immediately.

If you have already made a report to law enforcement and still need help, or you have concerns a child is being or was subjected to grooming using Gmail, you can report the behavior to Google using this form. Please remember that you can always block any person you do not want to be contacted by on Gmail.

பதிப்புரிமை

பதிப்புரிமைச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படவும். பிறரின் அறிவுசார் சொத்துரிமைகளை (காப்புரிமை, வர்த்தகமுத்திரை, வர்த்தக ரகசியம் அல்லது பிற சொத்து உரிமைகள் உள்ளிட்டவை) மீறக்கூடாது. அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவதற்குப் பிறரை ஊக்கப்படுத்த அல்லது தூண்டவும் உங்களுக்கு அனுமதியில்லை. பதிப்புரிமை மீறல் குறித்து Google இடம் புகாரளிக்க, இந்தப் படிவத்தைப் பயன்படுத்தவும்.

உபத்திரவம்

பிறருக்கு உபத்திரவம் அளிக்க, மிரட்ட அல்லது அச்சுறுத்த Gmailஐப் பயன்படுத்தக் கூடாது. யாரேனும் இந்த நோக்கங்களுக்காக Gmailஐப் பயன்படுத்துவதைக் கண்டறிந்தால், அவர்களின் கணக்கு முடக்கப்படும்.

சட்டவிரோத நடவடிக்கைகள்

எல்லாவற்றையும் சட்டரீதியாகச் செய்யவும். சட்டத்திற்கு எதிரான செயல்பாடுகளை விளம்பரப்படுத்துவது, ஒழுங்கமைப்பது அல்லது அவற்றில் ஈடுபடுத்துவது ஆகிய செயல்களுக்கு Gmailஐப் பயன்படுத்தக் கூடாது.

கொள்கை அமலாக்கம்

இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி தவறான பயன்பாட்டைப் புகாரளிக்கலாம். இந்தக் கொள்கைகளை மீறுவதாகக் கண்டறியப்படும் கணக்குகளை Google முடக்கலாம். உங்கள் கணக்குத் தவறுதலாக முடக்கப்பட்டிருக்கிறது என நீங்கள் நினைத்தால், இந்தப் பக்கத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.